133-வது பிறந்தநாள்: அம்பேத்கர் உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!

133-வது பிறந்தநாளையொட்டி அம்பேத்கர் உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
133-வது பிறந்தநாள்: அம்பேத்கர் உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!
Published on

சென்னை,

சட்டமேதை டாக்டர் அண்ணல் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் 133-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அம்பேத்கருக்கு சிலை, உருவபடத்திற்க்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி சென்னை ராஜா அண்ணாமலைபுரம், அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கிழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து விசிக தலைவர் தொ.திருமாவளவன், அமைச்சர்கள், திமுக எம்.பிக்கள் உள்ளிட்டோர் அம்பேத்கர் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டரில் கூறியிருப்பதாவது;-

"பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்துப் பிற்போக்குத்தனங்களில் மூழ்கியிருந்த இந்தச் சமூகத்தில் அறிவொளி ஏற்றிட்ட புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் இலட்சியங்களை நெஞ்சிலேந்தி, சமத்துவநாள் உறுதிமொழியேற்று போற்றினேன். சமத்துவம், சனாதனத்தின் எதிர்ச்சொல்! மானுடத்தின் பொருள்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com