13ம் ஆண்டு நினைவு தினம்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலர்தூவி அஞ்சலி

பத்திரிகை உலகில் வியக்கத்தக்க வகையில் பல்வேறு சாதனைகள் படைத்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார்.
13ம் ஆண்டு நினைவு தினம்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலர்தூவி அஞ்சலி
Published on

சென்னை,

பத்திரிகை உலகில் வியக்கத்தக்க வகையில் பல்வேறு சாதனைகள் படைத்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார். அவரது 13-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் இன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் கல்வி, பத்திரிகை, விளையாட்டு, ஆன்மிகம் மற்றும் சமூக சேவைகளை நினைவு கூர்ந்து போற்றும் வகையில் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர், நினைவு இல்லத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் உருவ படத்துக்கு தினத்தந்தி குழும தலைவர் சி. பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குநர்கள் பா. சிவந்தி ஆதித்தன், பா. ஆதவன் ஆதித்தன் மற்றும் அனிதா குமரன் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

அதனை தொடர்ந்து, தினத்தந்தி, மாலை மலர், தந்தி டி.வி., தந்தி 1, டி.டி. நெக்ஸ்ட், ராணி, ராணி முத்து, ஹலோ எப்.எம்., கோகுலம் கதிர், சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., பெரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் உருவ படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல், அரசியல் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், சைதை துரைசாமி, எர்ணாவூர் நாராயணன், எஸ்.வி. சேகர் உள்பட முக்கிய பிரமுகர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com