13ம் ஆண்டு நினைவு தினம்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் மாலை அணிவித்து மரியாதை

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
13ம் ஆண்டு நினைவு தினம்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் மாலை அணிவித்து மரியாதை
Published on

தூத்துக்குடி,

பத்திரிகை உலகில் வியக்கத்தக்க வகையில் பல்வேறு சாதனைகள் படைத்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார். அவரது 13வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தினத்தந்தி குழுமத்தினர், பத்திரிக்கையாளர்கள் , அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 13வது நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள மணிமண்டபத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதேபோல், ராஜ்நாத் சிங் உடன் திருச்செந்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணனும், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருச்செந்தூர் சென்றுள்ள ராஜ்நாத் சிங், கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். முன்னதாக ராஜ்நாத் சிங் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com