13-ம் நூற்றாண்டு செங்கல் காட்சிக்கு வைப்பு

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் 13-ம் நூற்றாண்டு செங்கல் காட்சிக்கு வைக்கப்பட்டது.
13-ம் நூற்றாண்டு செங்கல் காட்சிக்கு வைப்பு
Published on

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் 13-ம் நூற்றாண்டு செங்கல் காட்சிக்கு வைக்கப்பட்டது.கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் 13-ம் நூற்றாண்டு செங்கல் காட்சிக்கு வைக்கப்பட்டது.வேப்பனப்பள்ளியை சேர்ந்த டாக்டர் லோகேஷ் கொடுத்த தகவலின் பேரில் மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் இணைந்து சிகரமானப்பள்ளி காட்டுப்பகுதியில் இடிந்த நிலையில் உள்ள கோவிலை ஆய்வு செய்தனர். அதில் பெரிய அளவிலான செங்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த செங்கல் 13-ம் நூற்றாண்டை சேர்ந்தததாகும். அந்த செங்கல் தற்போது அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறுகையில், விஜயநகரர் காலத்தில் பெரிய கற்களை கொண்டு கோட்டைகள் கட்டும்போது அவற்றின் மேல்பகுதியில் வைத்து கட்டிமுடிக்க பல்வேறு அளவுகளில் செங்கற்களை உருவாக்கியுள்ளார்கள். இதன் சுற்றுப்புறத்தில் எங்கேனும் இத்தகைய கோட்டை இருந்து அது இடிந்து அதன் செங்கல்லை இங்கு கொண்டு வந்து பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்த காட்டுப்பகுதியில் ஓரிடத்தில் பாறையில் சிறு உரல் போன்ற குழிகளும், கற்திட்டையும், 8-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லும், 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு மற்றும் இடிந்த கோவிலும் காணப்படுவதால், இச்செங்கல்லின் காலத்தை கணிப்பதற்கு மேலும் ஆய்வுகள் செய்ய வேண்டியுள்ளது. அங்கிருந்து கொண்டுவந்த ஒரு செங்கல் இம்மாத சிறப்புக் காட்சி பொருளாக கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com