14 வயது சிறுமி கர்ப்பம் - வாலிபர் மீது போக்சோ வழக்கு

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 14 வயது சிறுமி ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த சிறுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் மற்றும் அனைத்து மகளிர் போலீசார் அங்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சிறுமி சென்னையை சேர்ந்தவர் என்றும், 9-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள சிறுமி இந்த ஆண்டு 10-ம் வகுப்பு படிக்க இருப்பதும், விடுமுறை காரணமாக தாயாருடன் உறவினர் வீட்டிற்கு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்ததும் தெரிய வந்தது. மேலும், சென்னையில் தனது வீட்டில் இருந்து டியூஷனுக்கு சென்றபோது ஆட்டோவில் வந்த அறிமுகமான வாலிபர் ஒருவர் தன்னிடம் வழி கேட்டதாகவும் அப்போது தன்னை கடத்திச் சென்று பலவந்தப்படுத்தியதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com