திருச்சியில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - கனிமொழி எம்.பி. வேதனை

துறைசார் அதிகாரிகளாவது மக்கள் முன் விளக்கமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என கனிமொழி தெரிவித்தார்.
கனிமொழி
Published on

சென்னை,

கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

திருச்சி - கீழப்புலிவார் ரோடு பகுதியில் 14 வயது சிறுமி, கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

தொடரும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களால் தமிழ்நாட்டுப் பெண்கள் பீதியில் உறைந்து போய் இருக்க, எதற்குமே பொறுப்பேற்காத இந்த தவெக அரசு, என்னவானாலும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்ற துணிச்சலில் தான் குற்றவாளிகள் ஊருக்குள் சுற்றித் திரிகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

விளக்கமளிக்கப் போவதில்லை

காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதல்-அமைச்சர் விஜய், என்னவானாலும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தொடரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து விளக்கமளிக்கப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது. குறைந்தபட்சம் துறைசார் அதிகாரிகளாவது மக்கள் முன் விளக்கமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com