14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர்.
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
Published on

திருப்பூர்,

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு திருமணம் முடிந்து, 14 வயதில் மகள் உள்ளார். இவருக்கு விவாகரத்தாகி, அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் கோஸ் (37) என்பவரை 2-வதாக திருமணம் செய்தார்.

இந்தநிலையில், ரஞ்சித் கோஸ் குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தங்கி, கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத் தன்று ரஞ்சித் கோஸ் தனது 2-வது மனைவியின் மகளான 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறினாள்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி காங்கயம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், ரஞ்சித் கோஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com