ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை
Published on

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

144 தடை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை மறுநாள் (11-ந் தேதி) தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

அடுத்த மாதம் (அக்டோபர்) 30-ந் தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நடைபெறுகிறது.

இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கை கருத்தில் கொண்டு இன்று முதல் (வெள்ளிக்கிழமை) 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதுதவிர, வருகிற 15-ந் தேதி வரையும், அக்டோபர் மாதம் 25-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை வெளிமாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்களில் நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்த வரவும் தடை விதிக்கப்படுகிறது.

முன்அனுமதி

நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள் மட்டுமே மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்று ஜோதி எடுத்து வரவேண்டும்.

அஞ்சலி செலுத்த வாகனங்களில் வருகிறவர்கள், மாவட்ட நிர்வாகத்தின் முன்அனுமதி பெற்றுதான் வரவேண்டும். இந்த உத்தரவை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com