சென்னையில் மட்டும் தீபாவளியில் 148 வழக்குகள் பதிவு

சென்னையில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தது தொடர்பாக மொத்தம் 237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் தீபாவளியில் 148 வழக்குகள் பதிவு
Published on: 

சென்னை,

சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்த நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்தது உள்ளிட்ட விதிமீறல்கள் தொடர்பாக சென்னை மாநகரில் ஒரே நாளில் மொத்தம் 237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை பெருநகரில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என மொத்தம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ. அமல்ராஜ் உத்தரவின்பேரில், காவல் உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக, கடந்த நவ. 8 அன்று தீபாவளி பண்டிகையின்போது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்படி, சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக 148 வழக்குகளும், உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்தது தொடர்பாக 10 வழக்குகளும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஒலி எழுப்பும் வகையில் பட்டாசு வெடித்தது தொடர்பாக 79 வழக்குகளும் என மொத்தம் 237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

X