

சென்னை,
சென்னை கோடம்பாக்கம் துணை மின்நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-
சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதற்கு உரிய தேதியில் கட்ட வேண்டும். 25,500 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. 28,000 இணைப்புதாரர்களுக்கு மட்டுமே மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
பல இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் இரவு முழுவதும் 4,000 பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேங்கியுள்ள மழைநீர் பாதிப்பு குறைந்த உடன் விரைவில் அனைத்து இடங்களிலும் மின் இணைப்பு வழங்கப்படும். டெல்டா மாவட்டங்களில் மின்விநோயகத்தில் எந்த பாதிப்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.