செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 15 மணி நேரம் மின்வெட்டு; பொதுமக்கள் அவதி

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 15 மணி நேரம் மின்வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 15 மணி நேரம் மின்வெட்டு; பொதுமக்கள் அவதி
Published on

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கன்னிவாக்கம், பெருமாட்டுநல்லூர், தர்காஸ், தங்கபாபுரம் வரதராஜா நகர், அன்னை மீனாட்சி நகர், விஜயபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு துண்டிக்கப்பட்ட மின்சாரம் ஒரு சில இடங்களில் 12 மணி நேரம் கழித்து வந்தது.

ஆனால் பெருமாட்டுநல்லூர், வரதராஜா நகர் பகுதியில் 15 மணி நேரம் கழித்து நேற்று காலை 11:45 மணி அளவில் மின்சாரம் வந்தது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் இரவு முழுவதும் கொசுக்கடியால் தூங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:- மாதந்தோறும் மின் பராமரிப்புக்காக ஒரு நாள் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. அன்றைய தினத்தில் மின்கம்பிகள் மீது உரசியப்படி செல்லும் மரக்கிளைகள் மற்றும் செடி கொடிகளை மின்சார வாரிய ஊழியர்கள் சரியான முறையில் அகற்றி மின்பாதைகளை பாராமரிப்பதில்லை. மழைக்காலங்களில் இதுபோன்று மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க மின்சார கம்பிகள் செல்லும் பாதைகளை முறையாக பராமரிப்பு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com