15 ஐபிஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

நிர்வாக காரணங்களுக்காக ஐபிஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு அவ்வப்போது பணியிட மாற்றம் செய்து வருகிறது.
தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை,

நிர்வாக காரணங்களுக்காக ஐபிஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு அவ்வப்போது பணியிட மாற்றம் செய்து வருகிறது. அந்தவகையில் 15 ஐபிஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பணியிட மாற்றம்

அதன்படி சென்னை பெருநகர காவல் துறையின் நலவாழ்வு மற்றும் எஸ்டேட் துறையின் காவல் ஆணையராக இருந்த டி.கண்ணன் இப்போது தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள தலைமையகம் மற்றும் நிர்வாக பிரிவின் காவல்துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தாம்பரம் காவல் ஆணையகரத்தில் மத்திய குற்றப்பிரிவின் காவல்துறை ஆணையராக இருந்த ஏ.வேல்முருகன் இப்போது காவல் கண்காணிப்பாளர் ,உதவி காவல் ஆய்வாளர் ஜெனரல் மற்றும் நவீனமயமாக்கல் பிரிவின் டிஜிபி காவல்துறை தலைவர் அலுவலகத்தில் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை பயங்கரவாதத் தடுப்பு பிரிவின் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆர்.ரமேஷ் கிருஷ்ணன் இப்போது திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலையத்தின் துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 12 ஐபிஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான விபரங்கள் பின்வருமாறு:-

Attachment
PDF
DIPR-IPS Transfers & Postings - Date.24.06.2026
Preview
X

Daily Thanthi
www.dailythanthi.com