நெல்லையில் 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

நெல்லை மாநகரம் மேலப்பாளையம் குறுந்துடையார்புரம் பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தடுப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
நெல்லையில் 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் குறுந்துடையார்புரம் பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தடுப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த திருமால்நகரை சேர்ந்த துளசி (வயது 19) என்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சுமார் 1.500 கிலோ கிராம் கஞ்சா இருந்தது.

இதனையடுத்து அந்த கஞ்சா மற்றும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேலப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, துளசியை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com