கோவில்பட்டியில் 1.5 கிலோ கஞ்சா, ரூ.21 ஆயிரம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கோவில்பட்டி ராஜீவ்நகர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
கஞ்சா, பணம் பறிமுதல், கைது
Published on

தூத்துக்குடி,

கோவில்பட்டியில் 1.5 கிலோ கஞ்சா, ரூ.21 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக ஒரு நபரை கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கோவில்பட்டி ராஜீவ்நகர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படியான நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

1.5 கிலோ கஞ்சா, ரூ.21 ஆயிரம் பறிமுதல், கைது:

அதில் அந்த நபர் கோவில்பட்டி ராஜீவ்நகரைச் சேர்ந்த முருகேசன் (வயது 43) என்பதும், அவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீஹா வழக்குப்பதிவு செய்து மேற்சொன்ன நபரை கைது செய்து, அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் ரூ.21 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com