சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.5 கிலோ தங்கம் பறிமுதல் - அதிகாரிகள் விசாரணை

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.5 கிலோ தங்கம் பறிமுதல் - அதிகாரிகள் விசாரணை
Published on

திருச்சி,

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவதும், இங்கிருந்து வெளிநாட்டு பணத் தாள்களை கடத்தி செல்வதும் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும் அதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த திருச்சியை சேர்ந்த ஷேக் அப்துல்லா காதர் (வயது 43) என்ற பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது அவர் உடமைகளில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில், சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் நேற்று இரவு திருச்சி வந்தது.

இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது மதுரையைச் சேர்ந்த அபூ சலி (41) என்ற பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவரை தனி அறைக்கு அழைத்து சென்ற அதிகாரிகள் அவர் எடுத்து வந்த உடமைகளை சல்லடை போட்டு நவீன ஸ்கேன் கருவி மூலம் சோதனை செய்தனர்.

இதில் அவர் தான் கொண்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையும் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கண்ட பயணிகளிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் இருவரிடமும் இருந்து 1,516 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 86 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் ரூ.1 கோடியே 33 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com