அதிமுகவிலிருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்

யானை தேய்ந்து கட்டெறும்பான கதையாக அதிமுகவின் நிலை உள்ளது என செங்கோட்டையன் கூறியுள்ளார்.
செங்கோட்டையன்
Published on: 

கோபி,

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில், அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் பேசியதாவது:-

அதிமுகவின் நிலை

அதிமுகவில் இருந்து என்னை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். தற்போது நான் எங்கு இருக்கிறேன் என்பதைப் பார்க்க வேண்டும். யானை தேய்ந்து கட்டெறும்பான கதையாக அதிமுகவின் நிலை உள்ளது.

தேர்தலில் நான் வருவேன், நீ வருவாய் என்று பேசியவர்கள் தற்போது 2-வது, 3-வது இடங்களுக்கு சென்றுவிட்டனர். தற்போது தேர்தல் களத்தில் கூட பலரால் நிற்க முடியவில்லை.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு, முதலமைச்சர் விஜய்யைப் போன்ற ஒருவரை நான் பார்க்கவில்லை.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com