தமிழ்நாட்டில் 15 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் நேற்று 490 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் 15 பேருக்கு கொரோனா
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் நேற்று 490 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அந்தவகையில், சென்னை மாவட்டத்தில் 10 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 பேருக்கும், கோவை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதேநேரம், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் நேற்று கொரோனா உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com