15 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் அடைப்பு

15 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் அடைப்பு
15 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் அடைப்பு
Published on

தஞ்சை மாவட்டத்தில் 15 டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் அடைக்கப்படுகிறது.

டாஸ்மாக் கடைகள்

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் சட்டசபையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானிய கோரிக்கையின்போது 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 5,329 டாஸ்மாக் கடைகளில் 500 டாஸ்மாக் கடைகளை இன்று (வியாழக்கிழமை) முதல் அடைக்க தமிழகஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 166 டாஸ்மாக் கடைகளில் 15 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.

எந்தந்த கடைகள்

தஞ்சையில் சி.ஆர்.சி. டெப்போ எதிரே, தஞ்சை நாகைரோடு, கீழவாசல், கீழஅலங்கம், மானோஜியப்பாவீதி, வடக்குமெயின்ரோடு, கிழக்கு போலீஸ் நிலையம் ரோடு, கீழவாசல் அண்ணாசாலை, தெற்குஅலங்கம், சாந்தப்பிள்ளைகேட், பட்டுக்கோட்டையில் மார்க்கெட் ரோடு, மணிக்கூண்டு, முத்துப்பேட்டை ரோடு, உதயசூரியபுரம், அய்யம்பேட்டை குறிஞ்சிநகர் ஆகிய 15 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் அடைக்கப்படுகின்றன.

இந்த 15 கடைகளும் மக்கள் அதிகஅளவில் வந்து செல்லக்கூடிய முக்கிய பகுதிகளில் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com