புதுவண்ணாரப்பேட்டை அருகே 1.5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

புதுவண்ணாரப்பேட்டை அருகே 1.5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
புதுவண்ணாரப்பேட்டை அருகே 1.5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
Published on

புது வண்ணாரப்பேட்டை,

புதுவண்ணாரப்பேட்டை வழியாக செம்மர கட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார்சோதனையில் செம்மரக்கட்டை கடத்திய டெம்போ வேன் சிக்கியது. இந்த விசாரணையில் செங்குன்றம், பாடியநல்லுர், எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 38) என்பவர் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இவருக்கு பழக்கமான ஸ்ரீபெரும்புதுரை சேர்ந்த டிரைவர் முருகன் என்பவர், அவரின் டெம்போ வேனில், ஒன்றரை டன் அளவுடைய 46 செம்மர கட்டைகளை ஏற்றி, அதை வேலுருக்கு எடுத்து செல்லுமாறு கூறியுள்ளார்.

வெங்கடேசன், டெம்போ வேனில் செம்மரங்களை ஏற்றி வேலுருக்கு புறப்பட்டார். ஆனால் வழி தவறி புது வண்ணாரப்பேட்டை மார்க்கமாக வந்தது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட செம்மரகட்டைகள், வனச்சரக அலுவலர் செல்வகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டன. வெங்கடேசனிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர். இதேபோன்று தலைமறைவாக உள்ள முருகனை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com