மேகமலை காப்பகத்தில் 150 யானைகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை காப்பகத்தில் 150 யானைகள் உள்ளதாக அதிகாரி கூறினார்.
மேகமலை காப்பகத்தில் 150 யானைகள்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை காப்பகத்தில் 150 யானைகள் உள்ளதாக அதிகாரி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் யானைகள், புலி, சிறுத்தை, மான், சாம்பல் நிற அணில், சிங்கவால், குரங்குகள், கரடி, காட்டு எருமை என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

வனவிலங்குகள் வாழ்வதற்கு ஏதுவான பாதுகாப்பான இடமாக இப்பகுதி விளங்குகிறது. ஆதலால் தான் தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் தான் அதிக அளவு வனவிலங்குகள் உள்ளன. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் வழித்தடம், யானைகள் அதிகரிப்பு, யானைகளின் நிலைமை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

150 யானைகள்

கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் தமிழக அளவில் இருந்து அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர். முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாப்டூர், ராஜபாளையம் ஆகிய வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டம், யானைகளின் எண்ணிக்கை, யானைகளின் உணவு பழக்க வழக்க முறைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் சுமார் 3,500-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் 150-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com