1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Published on

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி பகுதியில் இருந்து ரேஷன் அரிசி மூடைகளை சிலர் சரக்கு வாகனத்தில் கடத்தி செல்ல தயாராக இருப்பதாக சிவகாசி வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தனி வருவாய் ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் போலீசாருடன் வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபாண்டியன் மீனம்பட்டிக்கு சென்றார். அங்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த ஒரு சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அதில் 44 மூடைகளில் 1,540 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த ரேஷன் அரிசி மூடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தை சேர்ந்த சிவா (வயது 23), முத்துக்குமார் (31), கண்ணன் (28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com