தூத்துக்குடியில்1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடியில்1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில்1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Published on

தூத்துக்குடி தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜன் மற்றும் போலீசார் தூத்துக்குடி 1-ம் கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த ஒரு சரக்கு வாகனத்தை வழிமறித்து சோதனை நடத்தினர். அதில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் மொத்தம் 1500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அதனை கடத்தியதாக சீவலப்பேரியை சேர்ந்த இசக்கிபாண்டி (வயது 30), மகராஜன் (27), ஸ்ரீவைகுண்டம் விட்டிலாபுரத்தை சேர்ந்த கண்ணன் என்ற மணிகண்டன் (33) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com