திருத்தணி ரெயில் நிலையத்தில் 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

திருத்தணி ரெயில் நிலையத்தில் 1500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருத்தணி ரெயில் நிலையத்தில் 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Published on

திருத்தணி:

திருத்தணி ரெயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி திருட்டுத்தனமாக கடத்தப்படுவதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து இன்று ரெயில்வே போலீசார் திருத்தணி ரெயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு கும்பல் 45 மூட்டை ரேஷன் அரிசியுடன் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அந்த கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார்கள். இதை தொடர்ந்து போலீசார் அங்கு 45 மூட்டையில் இருந்த 1500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை போலீசார் திருத்தணியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com