தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகம் வந்த 1,500 துணை ராணுவத்தினர் சொந்த ஊர் திரும்பினர்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைந்தது. தேர்தல் வாக்குப்பதிவின்போது சென்னையில் மட்டும் 23,500 போலீசார் ஈடுபட்டனர்.
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகம் வந்த 1,500 துணை ராணுவத்தினர் சொந்த ஊர் திரும்பினர்
Published on

சென்னை,

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைந்தது. தேர்தல் வாக்குப்பதிவின்போது சென்னையில் மட்டும் 23,500 போலீசார் ஈடுபட்டனர். மேலும், வடமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 18 மத்திய காவல் படையினர், 10 சிறப்பு காவல் படையினர், 3 ஆயிரம் ஊர்காவல் படையினர், 1,800 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஊர்காவல் படையினர், 700 ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் துணை ராணுவத்தினர் என மொத்தம் 30 ஆயிரம் பேர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 58 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தற்போது வாக்கு எண்ணும் மையங்களிலும் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பாதுகாப்புக்காக வந்திருந்த சுமார் 45-க்கும் மேற்பட்ட கம்பெனி துணை ராணுவத்தினர் படிப்படியாக சொந்த மாநிலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது.

அதன்படி, நேற்று மாலை 5 மணியளவில் 8 கம்பெனி துணை ராணுவத்தினர், இரவு 10-க்கு மேல் மற்றொரு 8 கம்பெனி துணை ராணுவத்தினர் என சென்டிரலில் இருந்து ராஜஸ்தானுக்கு புறப்பட்டனர். மொத்தம் 1,500 துணை ராணுவத்தினர் நேற்று சென்னையில் இருந்து வடமாநிலம் சென்றுள்ளனர். மீதம் உள்ளவர்களும் படிப்படியாக சொந்த மாநிலம் செல்ல உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com