151-வது பிறந்தநாள்: வ.உ.சி. உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை

வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை செலுத்துகிறார்.
151-வது பிறந்தநாள்: வ.உ.சி. உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் (வ.உ.சி.) 151-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில், சென்னை ராஜாஜி சாலை, துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட உள்ள உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

இதில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

மேலும் விழாவை முன்னிட்டு சென்னை, கலைவாணர் அரங்கில் 'கப்பலோட்டிய தமிழன்' படம் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கும், 6-ந்தேதி காலை 10.30 மணி மற்றும் பிற்பகல் 2 மணிக்கும் என 2 காட்சிகளாக 'டிஜிட்டல்' முறையில் திரையிடப்படவுள்ளது. அனுமதி இலவசம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com