திட்டக்குடியில்16 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திட்டக்குடியில் 16 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திட்டக்குடியில்16 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
Published on

திட்டக்குடி 

திட்டக்குடி நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதையடுத்து திட்டக்குடி நகராட்சி துப்புரவு ஆய்வாளர் குமரவேல், சுகாதார ஆய்வாளர் ரங்கநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் திட்டக்குடி பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடைகளில் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 16 கிலோ பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com