16 புதிய துணை மின் நிலையங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
16 புதிய துணை மின் நிலையங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
Published on

சென்னை,

எரிசக்தித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், 161 கோடியே 38 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

மேலும், 51 துணை மின் நிலையங்களில் 602 எம்.வி.ஏ அளவிற்கு திறன் உயர்த்தி 97 கோடியே 56 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 52 எண்ணிக்கையிலான மின் மாற்றிகளின் செயல்பாட்டினையும் தொடங்கி வைத்தார்.

மேற்கூறிய 258 கோடியே 94 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மின்திட்டங்கள் மூலம் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாய பெருமக்களுக்கு தரமான, தடையில்லா மின்சாரம் வழங்கிட வழிவகை ஏற்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் தலைவர் / தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மா.இராமச்சந்திரன் (முழு கூடுதல் பொறுப்பு) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com