"மதுரை தமிழ்ச்சங்கத்தில் 16 ஆயிரம் புத்தகங்கள் என்பது மிகவும் குறைவானது"

“மதுரை தமிழ்ச்சங்கத்தில் 16 ஆயிரம் புத்தகங்கள் என்பது மிகவும் குறைவானது”. எனவே துணை இயக்குனர் நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
"மதுரை தமிழ்ச்சங்கத்தில் 16 ஆயிரம் புத்தகங்கள் என்பது மிகவும் குறைவானது"
Published on

மதுரை மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2017-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரையில் உலக தமிழ்ச்சங்கம் திறக்கப்பட்டு நீண்டநாள் ஆகிவிட்டது. ஆனால் அங்கு தமிழ்மொழி வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படவில்லை. நூலகத்தில் தரமான நூல்கள் இல்லை. இதனால் இந்த சங்கம் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. எனவே உலக தமிழ்ச்சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ்மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்க வேண்டும். நூலகத்தில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ஏற்கனவே உலகத்தமிழ் சங்கத்தில் 16 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன என்றார்.

அதற்கு நீதிபதிகள், 16 ஆயிரம் புத்தகங்கள் என்பது மிக குறைவானவை. எனவே தமிழ்ச்சங்கத்தின் துணை இயக்குனர் நேரில் ஆஜராகி, இதற்காக ஒதுக்கப்படும் நிதி, அங்கு நடத்தப்படும் நிகழ்ச்சிகள், புத்தக விவரங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com