நெல்லையில் 16 வயது சிறுமிக்கு காதல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது

நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூரை சேர்ந்த வாலிபர் ஒருவர், 16 வயது சிறுமிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை, வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டத்தில் 16 வயது சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

16 வயது சிறுமிக்கு காதல் தொல்லை

நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூரை சேர்ந்தவர் அசோக் (வயது 27). பெயிண்டரான இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் 16 வயது சிறுமியிடம் பழகி வந்தார். பின்னர் அவர் அந்த சிறுமியை காதலிப்பதாக கூறினார். ஆனால் அவரின் காதலை சிறுமி ஏற்றுக்கொள்ளவில்லை.

வாலிபர் போக்சோவில் கைது

இதனால் ஆத்திரம் அடைந்த அசோக், அந்த சிறுமிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது செல்போனை பறித்து சாலையில் வீசி உடைத்து ரகளை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அசோக்கை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com