16 வயது சிறுமி கர்ப்பம்: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


16 வயது சிறுமி கர்ப்பம்: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x

காதலிப்பதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு வயிற்று வலி இருப்பதாக கூறி, அந்த சிறுமியை பெற்றோர் தஞ்சை அரசு ராசா மிராசுதாரர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதனை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தகவல் அறிந்த சமூகநலத்துறை அலுவலர்கள் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதன் பேரில் போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை ஒரத்தநாடு செம்மண்குட்டை பகுதியை சேர்ந்த சேகர் மகன் அன்பழகன் (31 வயது) காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இது குறித்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அன்பழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story