மாமல்லபுரத்தில் தமிழக முதல்வரின் 160 அடி நீள மணல் சிற்பம் - சிற்பக்கலைஞர்கள் வடிவமைப்பு

மாமல்லபுரத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 160 அடி நீள மணல் சிற்பத்தை சிற்பக்கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர்.
மாமல்லபுரத்தில் தமிழக முதல்வரின் 160 அடி நீள மணல் சிற்பம் - சிற்பக்கலைஞர்கள் வடிவமைப்பு
Published on

காஞ்சிபுரம்,

பல்லவ சிற்பக் கலையின் பெருமைகளை தாங்கி நிற்கும் மாமல்லபுரம் கடற்கரையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 160 அடி நீள மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி 2021என்ற கோஷத்தை முன்வைத்து இந்த மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளனர்.

கடந்த 10 நாட்களாக 50 சிற்பக்கலைஞர்கள் 50 டன் கடல் மணலைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைத்துள்ள இந்த மணல் சிற்பத்தை தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திறந்து வைக்கிறார். இந்த மணல் சிற்பம் ஒரு வாரம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com