ஓபிஎஸ் மாநாட்டிற்கு சென்று திரும்பிய வேன் கவிழ்ந்து விபத்து - 17 பேர் காயம்

ஓபிஎஸ் மாநாட்டிற்கு சென்று திரும்பிய வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஓபிஎஸ் மாநாட்டிற்கு சென்று திரும்பிய வேன் கவிழ்ந்து விபத்து - 17 பேர் காயம்
Published on

மதுரை,

திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு விழா என முப்பெரும் விழா மாநாடு நேற்று மாலை நடந்தது. மாநாட்டுக்கு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

இதில் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என மாநாட்டிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், திருச்சியில் நடைபெற்ற ஓபிஎஸ் மாநாட்டில் பங்கேற்று விட்டு செந்த ஊர் திரும்பிய தொண்டர்கள் வேன் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயமுருகன் உள்பட 17 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த 17 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com