உழவர் சந்தைகளில் ரூ.17¼ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

உழவர் சந்தைகளில் ரூ.17¼ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையானது.
உழவர் சந்தைகளில் ரூ.17¼ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
Published on

ஈரோடு சம்பத்நகர், பெரியார்நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் விவசாயிகளும் அதிக அளவிலான காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். அதுபோல் நேற்று நடந்த சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்காக காய்கறிகளை கொண்டு வந்தனர். பொதுமக்கள் ஆர்வமாக வந்து காய்கறிகளை வாங்கி சென்றார்கள். மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் மொத்தம் 64.19 டன் காய்கறிகள் கொண்டு வரப்பட்டதாகவும், ரூ.17 லட்சத்து 32 ஆயிரத்து 502-க்கு காய்கறிகள் விற்பனையானதாகவும் உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com