

சென்னை,
“இப்ப வரைக்கும் 17 கொலைகள்.. 3 நாளா பேப்பர் படிச்சீங்களா சிம் சார்? டிஜிபியும், செக்ரட்டரியும் உங்கள தொடர்பு கொள்ள முடியலையாமே..' என திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
நாட்டு மக்கள் எல்லாம் மறந்திருக்க மாட்டீங்க. இருந்தாலும் கூட உங்களை நினைவூட்டுறதுக்காகதான் இதை நாங்க பிளே பண்ணோம். (விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூன பேசிய வீடியோ முன்னதாக Play செய்யபட்டது). பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் பேசின பேச்சு, எழுதி வைத்துக்கொள்ளுங்கள்: "ஆறு மாசத்துல சட்டம் ஒழுங்கை நாங்க எப்படி தூக்கி நிப்பாட்டிடுவோம்னு, இந்த ஆறு மாசம் தவெக-வினுடைய ஆட்சி, நேற்றைக்கு நடந்த தீபாவளி பண்டிகைதான் ஒரு பெரிய சாட்சி.
இப்ப கூட நான் வந்து உங்களை சந்திக்கிறதுக்கு வரும்போதுகூட தொலைக்காட்சியில பார்த்தேன். தலை தீபாவளியை கொண்டாடிட்டு முதல்-அமைச்சர் விஜய் இப்பதான் வந்து சீப் செக்ரட்டரியையும் டிஜிபி கிட்டயும் ஒரு ரிவ்யூ பண்ணிட்டு இருக்கிறார். இந்த ஆட்சியின் முதல் தீபாவளி, அதனால தலை தீபாவளின்னு சொன்னேன்; உடனே விர்ச்சுவல் வாரியர்ஸ் கிளம்பி வந்துராதீங்க. எங்களுடைய எதிர்க்கட்சித் தலைவர் சொன்ன மாதிரி, இந்த பண்டிகை நாள்ல பட்டாசு சத்தத்தை விட பட்டா கத்தி சத்தம்தான் அதிகமா கேட்டுருக்கு.
தமிழ்நாட்டில பண்டிகை தினத்தன்று மட்டும் 17 கொலைகள் நடந்திருக்கு. இத பற்றி கேட்டா. . சட்டவிரோத சம்பவங்கள் பண்டிகை காலங்கள்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும்னு—யார் சொல்றாரு? நம்ம ஸ்டாண்ட்அப் காமெடியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் அவர்கள் சொல்றார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் அவர்களே, தீபாவளி பண்டிகை அன்னைக்கு நீங்க பேசுற சிறப்பு பட்டிமன்றத்துல உங்க இஷ்டத்துக்கு பேசுறதுக்கு இப்ப நீங்க அமைச்சர் ஆட்சியில் இருக்கீங்க. பண்டிகை நாட்கள்லதான் , காவல்துறை ரொம்ப அதிகமா விழிப்போடு இருக்கணும். ஆனா இந்த பண்டிகை நாட்கள்ல வியாபாரம் குறைஞ்சிருக்குது, வரலாறு காணாத அளவுக்கு கொலைகள் அதிகரிச்சிருக்குது.
கிரிக்கெட் ஸ்கோர் ஏறும். 6, 8, 9 ரன், 10 ரன் அப்படி எகிறும். அந்த மாதிரி பண்டிகை காலமான நேற்று மட்டும் 9, 10, 13, என நைட் 17 வரைக்கும் போய் எகிறுது. கிரிக்கெட் ஸ்கோர் மாதிரி, இன்னைக்கு கொலைகளுடைய எண்ணிக்கை அதிகமா இருக்கு.
ஹாலிவுட் படத்துல 'தி பர்ஜ்' (The Purge) அப்படின்னு ஒரு படம் இருக்கு. அந்த படத்துல ஒரு நாள் லீவு விட்டுருவாங்க. சட்டம் ஒழுங்க பத்தி கவலைப்பட மாட்டாங்க. போலீஸ் கண்டுகாது, அரசாங்கம் கண்டுக்காது; யார் வேணா எந்த குற்றச் சம்பவத்துலயும் ஈடுபடலாம், அது யாருமே கேட்க முடியாது. அப்படித்தான் முதல்-அமைச்சர் விஜய் அவர்களே, தீபாவளி பண்டிகை அன்னைக்கு ஒரு நாள் நீங்க Sleep Mode போயிட்டு எந்த அதிகாரியுமே வந்து முதலமைச்சரைத் தொடர்பு கொள்ள முடியலையா.? அந்த ஸ்லீப் மோட்ல போயிட்டு, இந்த போர்ஜ் ஹாலிவுட் திரைப்படம் மாதிரி, இன்னைக்கு தமிழ்நாட்டுல 17 சம்பவங்கள் நடந்திருக்கு.
இது டைம்ஸ் ஆப் இந்தியாவுடைய இன்றைய பத்திரிக்கை. இத பிரிண்ட்ல ஏத்தும்போது '13 மர்டர்ஸ் இன் எ சேம் டே, ஒன் ஆன் எ சிங்கிள் டே'. ஆனா இன்னைக்கு 17 பேர் கொலை செய்யபட்டுள்ள செய்தி வந்திருக்கு, இப்போ வரைக்கும். சிம் சார், பேப்பர் படிக்கிறீங்களா சார்? மூணு நாளா பேப்பர் படிச்சீங்களா சார்? எங்க சார் இருந்தீங்க மூணு நாளா? உங்க சீப் செக்ரட்டரி உங்களைத் தொடர்பு கொள்ள முடியலன்னு தகவல் வருது எங்களுக்கு. உங்க டிஜிபி உங்களைத் தொடர்பு கொள்ள முடியலன்னு தகவல் சார்.
காலையில 10 மணிக்கு வந்து, சாயங்காலம் 5 மணிக்கு போகுற ஸ்கூல் சில்ட்ரன் வேலை இல்லை முதலமைச்சர் வேலை. ரவுண்ட் தி கிளாக் (Round the clock) 24/7 தேவைப்படுறீங்க. நீங்க ஒரு விரல் புரட்சி பண்ணி படத்துல வந்து பெருசா சீன் எல்லாம் போட்டீங்க. படத்துல ஒரு விரல் புரட்சி, உங்க ஆட்சியில உருட்டுக்கட்டை புரட்சி... 'கத்தி' படத்துல தண்ணிக்கு வாய் கிழிய பேசி சண்டை போட்டீங்க, தண்ணி கேட்டு வந்தார் ஒருத்தர் .. சாமானியர். உங்க துணை சபாநாயகர் வீட்டுல தண்ணி காட்டிட்டீங்க, அது ரொம்ப வேதனையா இருக்குது. ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியோட வீட்டுல வாக்களிச்சவர்—அது உங்களுக்கு வாக்களிச்சவங்க, நான் விஜய் அண்ணாக்குதான் ஓட்டு போட்டேன்னு சொல்றார். உங்களுக்கு வாக்களிச்சவர் வந்து தண்ணி வரலன்னு சொல்ல, பண்டிகை காலத்துல ஒரு வீட்ல தண்ணி வரலன்னா ஒரு சாதாரண குடும்பத்துல எவ்வளவு சிரமப்படுவோம்?
நீங்க மிட்டா மராசுதாருங்க. உங்களுக்கு ஜெனரேட்டர் இருக்கும், உங்களுக்கு மோட்டார் இருக்கும். உங்க துணை சபாநாயகர் டபுள் தண்ணில இருப்பாரு. நான் குடிக்கிற தண்ணியைச் சொல்றேன்; ஒரு டேங்குக்குப் பதிலா ரெண்டு டேங்கு, டபுள் தண்ணில இருப்பாரு. ஏன்னா, அதனால உருட்டுக்கட்டையை அடிக்க வராருல? அப்போ ஒரு அடிப்படைப் பிரச்சினையைப் பத்தி பேசுறதுக்கு ஒரு சாதாரண சாமானியன் வரும்போது, அதை அணுகுகிற ஒரு பக்குவம் கூட இந்த ஆளுகிற ஆட்சியாளருக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு இல்லன்னா, இந்த தமிழ்நாட்டுல ஆட்சிதான் நடக்குதா இல்லை ஜங்கிள் ராஜ், காட்டாட்சி நடக்குதா?
தமிழ்நாட்டில இன்னைக்கு Gun Culture நடக்குது. இப்போ வேலூர் மாவட்டத்துல குடியாத்தத்துக்கு பக்கத்துல பாமக பிரமுகர் ஒருத்தரை துப்பாக்கியால சுட்டுருக்காங்க. துப்பாக்கி கலாசாரம் அதிகமா இருக்கு. ஜங்கிள் ராஜ், தமிழ்நாட்டில ஜங்கிள் ராஜ் நடக்குது, காட்டாட்சி நடக்குது. இந்த சட்டம் ஒழுங்க பத்தி பார்த்துக்கிறதுக்கு ஒருவேளை ஆபீசர் இன்காம்பிடெண்ட்டாக (Incompetent) இருக்காங்களா அல்லது முதலமைச்சர் இன்காம்பிடெண்ட்டாக இருக்கிறாரா என்ற ஒரு சந்தேகம் எல்லாருக்கும் இருக்கு
ஒரு சட்டம் ஒழுங்குன்னா யார் ரெஸ்பான்சிபிள் (Responsible)? தமிழ்நாட்டோட டிஜிபி ரெஸ்பான்சிபிள், ஏடிஜிபி எல் அண்ட் ஓ (Law & Order) ரெஸ்பான்சிபிள், ஐஜி இன்டெலிஜென்ஸ் ரெஸ்பான்சிபிள், சென்னையைப் பொறுத்தவரைக்கும் கூடுதலா சிஓபி (COP) ரெஸ்பான்சிபிள். இவங்க எல்லாம் அதிகாரிகள், இவங்களுடைய வேலை என்ன? ஓட ஓட வெட்டி கொலை செய்றதை கவனத்தில் கொள்ளணும். சென்னை கமிஷனர், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கணும், வன்முறைகள் நடப்பதை தடுக்கணும். சட்டம் ஒழுங்கை முன்கூட்டியே பிரிடிக்ட் (Predict) பண்ணனும். இந்த விஷயத்தை எல்லாம் முதலமைச்சருடைய கவனத்துக்கு கொண்டு போகணும். கம்ப்ளையன்ஸ் (Compliance) கொடுக்கணும். கம்ப்ளையன்ஸ்ன்னா வந்து, நான் என்ன நடவடிக்கை எடுத்தேன் அப்படிங்கறது முதலமைச்சருக்கு அவ்வப்போது ரிப்போர்ட் கொடுக்கணும். அதை முதலமைச்சர் உட்கார்ந்து ரிவ்யூ (Review) பண்ணனும். முதலமைச்சர் அவங்களுக்கு எல்லாம் அறிவுரை சொல்லணும், ஆலோசனை சொல்லணும், உத்தரவு சொல்லணும். இதுக்கு எல்லாத்துக்கும் புத்தி இருக்கா முதலமைச்சருக்குன்னு எனக்கு தெரியல.
ஆனால், இந்த அதிகாரிகள் எல்லாம் போய் இவர்கிட்ட இன்ஸ்ட்ரக்ஷன் வாங்குறதுக்கோ ஆர்டர்ஸ் வாங்குறதுக்கோ இஸ் நாட் அவைலபிள் (Is not available). அஞ்சு மணிக்கு மேல முதலமைச்சர் காணாம போனார்னா அதிகாரிகள் என்ன பண்ணுவாங்க? நான் இந்த இடத்துல இன்காம்பிடெண்ட் ஆபீசர், இன்காம்பிடெண்ட் சீப் மினிஸ்டரானா, இன்காம்பிடெண்ட் சீப் மினிஸ்டர் தான் ரெஸ்பான்சிபிலிட்டிய நான் பிக்ஸ் பண்ணுவேன். காரணம், அதிகாரிகள் எனிடைம் அவைலபிள்.
காவல்துறை அதிகாரிகளை பார்த்து கேடக்குறேன் உங்களுக்கு சுதந்திரம் இருக்கா? அரசியல் கைதுகளை மட்டுமே பாஞ்சி பாஞ்சி வெடிகாலையில கைது செய்றதுக்கு முதலமைச்சர் உத்தரவு போடுறாரே தவிர, பொதுமக்களுடைய பாதுகாப்புக்கு முதலமைச்சர் உத்தரவு போடலன்னு உங்களுக்கு நல்லா தெரியும். நீங்க போய் நிக்கிறீங்க, பனையூர்ல போய் நிக்க முடியுமா உங்களால?
தமிழ்நாட்டில ஏற்கனவே இருந்த முதலமைச்சர்களிடம் எனிடைம் எனிபாடி கேன் காண்டாக்ட் தி அபிஷியல்ஸ் (Anytime, anybody can contact the officials), அதான் முதலமைச்சருடைய வேலை. ஆனா இன்னைக்கு முதலமைச்சருக்கு அப்படிப்பட்ட ஒரு வேலையை விட்டுட்டு இவர் எங்கேயோ போயிருக்கிறார். இதுல வேற ரொம்ப அழகா சொல்றார், ஒழுக்கத்தை பத்தி பேசினார். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்த போதைப்பொருள் விஷயங்களை பத்தி பேசும்போது முதலமைச்சர் சொன்னாரு: "இது ஒரு ஃபன்னா இருக்கும், என்ஜாய் பண்ணுங்க, ஆனா அடிமை ஆயிடாதீங்க"ன்னார். குற்றச் சம்பவங்கள் இப்ப நடக்கறதெல்லாம் வந்து தனிமனித ஒழுக்கம்னு பேசினார். ஆனா திமுக ஆட்சியில் இருக்கும்போது தனிமனித ஒழுக்கம் இல்ல? இப்ப முதலமைச்சர் விஜய் வந்து தனிமனித ஒழுக்கத்தை பத்தி பேசுறதுக்கு என்ன யோக்கியதை இருக்குது? எல்லாம் கல்யாணத்துக்கு குடும்பத்தோடு வந்து வாழ்த்துங்கன்னு சொல்லுவாங்க. இதுக்கு மேல நான் ஒன்னும் பேசல. உனக்கு தனிமனித ஒழுக்கத்தை பத்தி பேசுறதுக்கு என்ன தகுதி இருக்கு? ஃபன்னா இருக்கும், என்ஜாய் பண்ணுங்க, அடிமை ஆயிடாதீங்க. அப்போ உங்களுடைய என்கரேஜ்மென்ட்தான் இன்னைக்கு போதை கலாசாரம் அதிகமா இருக்கு.
அதனுடைய விளைவுதான், கஞ்சாவை பயன்படுத்திட்டு பட்டாசு வெடிச்சிட்டு இருந்தாங்க தேனியில நடுரோட்ல வெடிக்கும்போது, ஏன் நடுரோட்ல வெடிக்கிறீங்கன்னு சொல்லி ஒரு உதவி ஆய்வாளர் கேள்வி கேட்கிறார். அதை தட்டி கேட்ட உதவி ஆய்வாளரைக் கொல்றாங்க. யுவர் ஃபன், யுவர் என்ஜாய்மென்ட், உங்களோட அட்வைஸ்—கொலை செய்றாங்க. ஆனா உங்க சைடுல இருந்து வரக்கூடிய அறிக்கை என்ன? முதலமைச்சர் சைடுல இருந்து வரக்கூடிய அறிக்கை என்ன? "பணியின் போது உயிரிழந்தார்." ஆனா காவல்துறையில் இருந்து வரும்போது பணி முடிச்சிட்டு வீட்டுக்கு போறார். என்ன, குற்றவாளிகளை காப்பாத்துறாங்களா? இந்த ஃபன் என்ஜாய்மென்ட்ல இருக்கக்கூடிய கல்பிரிட் (Culprit) சீப் மினிஸ்டர் காப்பாத்துறாரா?
இன்னொரு பெரிய ஒரு நகைச்சுவை—கோடம்பாக்கத்துல ஒரு சம்பவம் நடந்தது. எரிபொருள் வீச்சு... அத பெட்ரோல் பாம்-கு ஒரு அழகான பெயரை இந்த தமிழ்நாடு காவல்துறை கண்டுபிடிச்சிருக்கு! இது தமிழ்நாடு காவல்துறை கண்டுபிடிச்சதா இல்ல ஜான் ஆரோக்கியசாமி ஸ்ட்ராடஜி வகுத்து கொடுக்கிற, ஒரு காவல்துறைக்கு சொல்லிருக்கிறாரா தெரியல. எனக்குத் தெரிஞ்சு காவல்துறை இதை சொல்லல. பல உத்தரவுகளை இந்த அரசியல் ஆய்வாளர்கள் என்று சொல்லக்கூடிய, முதலமைச்சருக்கு ஆலோசனை சொல்ல கொடுக்கிறவங்க சொல்றதுதான் அதிகாரிகள் கேட்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கு.
இப்போ எரிபொருள்ன்னா என்ன சார்? கம்பி மத்தாப்பா சார்? அது புசுவானமா? அது பாம் (Bomb)ன்னு சொல்றதுக்கு இவங்களுக்கு வெட்கமா இருக்கு, அச்சமா இருக்கு. அப்போ நடக்கிற குற்றச் சம்பவத்தை தண்டிப்பதற்கு வழி இல்லை, அதுக்கு கட்ஸ் (Guts) இல்லை. ஆனா அதுக்கு ஒரு புனைபெயர் வைக்கிறார்கள்! ஒரு துணை சபாநாயகரை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரை, ஒரு சாதாரண காமன்மேன் (Common man) வாக்களிச்ச ஒரு சிட்டிசன் வந்து சந்திக்கும் போது அடிக்கிறார்னா, இந்த நாட்டுல சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு?
அதைவிட இன்னும் ஒரு படி போய் மேல... அதாவது நான் சொல்லும்போது சொல்றதுக்கே வெட்கப்படுறேன். இந்த தவெக-ல எம்எல்ஏ இருக்கிறவன்லாம் வந்து இதுக்கு முன்னாடி மக்கள் பணி ஆற்றியிருக்கிறானங்களா இல்ல இவங்கலாம் வந்து வேற ஏதனா வேலை செஞ்சிருந்தாங்களா எங்களுக்கு ஒன்னும் புரியல. அவங்க தலைவருக்கு ரசிகனா இருந்து டிக்கெட் வித்தவன்லாம் எப்படி இருப்பான் சார்? ஒரு பெண் ஐஏஎஸ் ஆபீசர் கலெக்டருக்கு எப்படி சார் இவன் நடந்துக்கிறான்? ரொம்ப அதிகமா சொல்றேன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவனே இல்ல, அவன் ஒரு... ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி, அந்த அம்மையார் கிட்ட ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி நடந்துக்கணும்? நானும் சட்டமன்ற உறுப்பினரா இருந்திருக்கிறேன். காவல்துறையில் இருக்கட்டும் சரி, ஐஏஎஸ் ஆபீசர்ஸ் எத்தனையோ பெண் உயர் அதிகாரிகள் இருக்கிறாங்க. எந்த நேரத்துக்கு வேணாலும் அவங்களுக்கு பிரச்சினைகளுக்கு மெசேஜ் கொடுத்தா ரிப்ளை பண்ணக்கூடிய ஆபீசர்ஸ்தான். அதுவும் குறிப்பா சென்னையில மழை நேரங்கள்ல, இரவு நேரங்கள்ல பெண் அதிகாரிகள் எல்லாம்—காவல்துறை அதிகாரி, ஐஏஎஸ் ஆபீசர்—12, 1 மணிக்குப் கூட நாங்க வந்து அவங்களுக்கு பிரச்சினைகளைச் சொல்வோம், இம்மீடியட்டா ரியாக்ட் பண்ணுவாங்க. சில நேரங்கள்ல பெண் ஆபீசர்ஸ் அந்த நேரத்துல நம்ம அவங்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு, அவங்களுக்கு அடுத்து இருக்கிற ஆபீசர் ஜென்ட்ஸ்-களுக்கு நாங்க வந்து மக்கள் பிரச்சினையை பத்தி பேசி இருக்கிறோம். இது பண்பட்ட அரசியல். நாங்கெல்லாம் கொள்கையோட அரசியலுக்காக வந்திருக்கோம். இவங்கல்லாம் சினிமாட்டிக்கட் ஃபேன்ஸா வந்தவங்க.
ஒரு பெண் ஐஏஎஸ் ஆபீசருக்கு இந்த மாதிரி ஒரு தொல்லை கொடுக்கிறாங்கன்னா வெட்கமா இல்லையா முதலமைச்சருக்கு? "நான் பெண்களை காப்பாத்துவதற்காக வந்திருக்கிற அவதார புருஷன்"னு சொன்னீங்களே முதலமைச்சர் விஜய், உங்க முகத்தை கண்ணாடி முன்னாடி போய் பாருங்க. உங்களுடைய எம்எல்ஏக்கள் எவ்வளவு கேவலமாக நடந்துக்கறாங்கன்னு! இதுக்கு நான் எம்எல்ஏவை குறை சொல்ல மாட்டேன்; இதுக்கு முழு முதல் குற்றவாளி, கல்பிரிட் நம்பர் ஒன் அக்யூஸ்ட், சீப் மினிஸ்டர் ஆஃப் தமிழ்நாடு, மினிஸ்டர் ஜோசப் விஜய் தான்.
நம்ம திமுக-ல இருக்கிற சட்டமன்ற உறுப்பினர்கள் தப்பு செஞ்சா ராஜினாமா செய்யச் சொல்லி வாய்கிழிய வக்கனையா பேசுனீங்களே விஜய் முதலமைச்சர் அவர்களே, இந்த ரெண்டு சட்டமன்ற உறுப்பினரும் ராஜினாமா செய்யணும்! இவங்க மேல வந்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கணும். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மேல கிரிமினல் வழக்கு தொடரனும். துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகரா இருக்கிறவர் மேலேயும் கிரிமினல் வழக்கு தொடரணும். டிஜிபி சுட்நாட் கீப் மௌன் (DGPs should not keep mum). நான் கேட்கிறேன்: காவல் துறை தலைவர் மகேஷ் குமார் அகர்வஅவர்களே, நீங்கள் மௌனம் காக்கக் கூடாது! இது காவல்துறைக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மிகப்பெரிய இழுக்கு. உங்கள் டிபார்ட்மெண்ட்ல இருக்கக்கூடிய ஒரு சப்-இன்ஸ்பெக்டரை அடிச்சு கொல்றாங்கன்னா, உங்களுக்கே பாதுகாப்பு இல்லை. சீப் செக்ரட்டரி, நீங்கள் அமைதியா இருக்கக் கூடாது; ஐஏஎஸ் ஆபீசர் ஹேஸ் பீன் அட்டாச்ட் (An IAS officer has been attacked), யூ ஆர் தி சோல் ப்ரொடக்டர் ஆஃப் ஐஏஎஸ் ஆபீசர்ஸ் (You are the sole protector of IAS officers). சீப் செக்ரட்டரி, டிஜிபி, போலீஸ்களை பாதுகாக்கக்கூடிய இடத்துல நீங்கள் இருக்கீங்க, வீணா மாட்டிக்காதீங்க.
ஒரு அமைச்சர்கள் வந்து பேட்டி கொடுக்கணும்னா, பக்கத்துல அதிகாரிகள் இருக்கும்போது அரசு சம்பந்தப்பட்ட விஷயத்தைப் பேசணும். தரவுகளோடு பேசணும். அரசாங்கத்தின் நடவடிக்கையைப் பற்றி பேசணும். இவங்க கண்றாவி அரசியல் பேசுறதுக்கு எதுக்கு அதிகாரிகளை உட்கார வைக்கிறாங்க பக்கத்துல? அதுவும் பெண் அதிகாரிகளை பக்கத்துல உட்கார வச்சிட்டு இந்த ஸ்டாண்ட்அப் காமெடியன் 'ஆண்மை இருக்கா?'ன்னு கேட்கிறார்; நான் கேட்கிறேன்: உங்க முதலமைச்சருக்கு ஆளுமை இருக்கா? ஆட்சி செய்வதற்கு ஆளுமை இருக்கா? 17 கொலை நடந்திருக்கு ஒரே நாள்ல, உங்க முதலமைச்சருக்கு ஆளுமை இருக்கா? ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி பாதிக்கப்படக்கூடிய அளவுக்கு இன்னைக்கு போலீஸ் அவங்களுக்கு தனி பாதுகாப்பு போட்டுக்கற அளவுக்கு ஆகியிருக்குதே, விஜய்க்கு ஆளுமை இருக்கா? ஆட்சி செய்கிற திறன் இருக்கா?
இந்த கேள்வி எல்லாம் நாங்க உங்ககிட்ட கேட்கிறதுக்கு காரணம் என்னன்னா, இதை நாங்க சும்மா விட போறது இல்ல. காவல்துறையும் சரி, சீப் செக்ரட்டரியும் சரி, நடந்திருக்கிற சம்பவங்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலன்னா, திமுக சும்மா விடாது. ஆறு மாசத்துல இந்த ஆட்சி எப்படி இருக்குதுன்னு ஒரே வரியில சொல்லணும்னா: குரங்கு கையில கொடுத்த பூமாலை! முதலமைச்சர் குரங்கு கையில தமிழ்நாட்டினுடைய அழகான மலர் மாலையை கையில கொடுத்திருக்கிறோம்; குரங்கு கையில கிடைத்திருக்கிற பூமாலை போன்றுதான் இன்றைக்கு தமிழ்நாடு ஆயிருக்கிறது.
செய்தியாளர் கேள்விக்கு பதில்:
இந்த பிரஸ் மூலியமா தமிழ்நாட்டினுடைய மக்களை நான் வேண்டிக்கிறேன் சார். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் ஒரு ட்வீட் (Tweet) போடுறாருன்னா, அதுக்குள்ள கமெண்ட்ட போய் பாருங்க சார், எவ்வளவு ஒரு கேவலமா, நாராசமா, அயோக்கியத்தனமா கமெண்ட் போடுறாங்க! இந்த கமெண்டுக்கு எல்லாம் காரணம், அவர்களின் தலைவர் விஜய்தான். ஏன்னா, இதுக்காகவே சம்பளம் கொடுத்து ஒரு விர்ச்சுவல் வாரியர்ஸை... கேவலமான அரசியல் தமிழ்நாட்டில செய்றாங்க.
ஒரு பொருளாதார நிபுணர் கலையரசன் அவரை விடிய காலை அஞ்சரை மணிக்கு ஓடிப்போய் பாஞ்சி கைது பண்றீங்களே, ஏன் இன்னும் இந்த துணை சபாநாயகரை நீங்கள் கைது பண்ணல? ஒரு ஐஏஎஸ் ஆபீசருக்கு கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வந்து ஒரு ஆபாச மெசேஜ் அனுப்பி இருக்கார், குடிச்சிட்டு வீட்டுக்கே போயிருக்கான், ஏன் அவனை கைது பண்ணல? இந்த கேள்வி எல்லாம், பொதுமக்கள் கேட்கிறாங்க?
தீபாவளி அன்னைக்கு ஒட்டுமொத்த மந்திரி சபையும் போய் ஒரு சேனல்ல உட்கார்ந்துக்கிறீங்க! நாட்டுல இருக்கிற சட்ட ஒழுங்கை பத்தி எவனுக்கும் அக்கறை இல்லை. அப்போ 'போக்கிரி'ல ஹீரோவா இருந்தீங்க, ஆனா இது வந்து ஒரு போக்கத்த ஆட்சியா இருக்குது! 'பிகில்' படத்துல வந்து நீங்கள் பெண்களுக்கு மரியாதை கொடுத்தீங்க, பிகில் ஆட்சியில பெண் கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லை! இதுதான் சந்தி சிரிக்குது தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு, காட்டாட்சி நடக்குது தமிழ்நாட்டில, ஆறு மாசத்துல குரங்கு கையில கொடுத்த பூமாலைதான் தமிழ்நாடு.
ஒரு எஸ்எஸ்ஐ (SSI), சட்ட ஒழுங்க பாதுகாக்கிறவர் தப்ப தட்டி கேட்டு சாகடிக்கப்பட்டிருக்கிறார். அந்த குடும்பம் இன்னைக்கு தீபாவளி கிடையாது. சாரி கேட்டீங்களா சார்? வக்கனையா பேசுனீங்களே திமுக ஆட்சியில மட்டும்... மூணு நாளா எங்க போய் சார் ஒழிஞ்சிட்டு இருந்தீங்க? பனையூர்ல பதுங்கு குழியில பதுங்கி இருந்தீங்களா? தனிமனித ஒழுக்கத்தை பத்தி பேச வந்துட்டார் தமிழ்நாட்டுல முதலமைச்சர்!
புதுசா அப்படியே வானத்தை பிடிச்சு வைகுண்டத்தை காட்டுறேன்னு சொல்லி வந்தீங்களா? சட்டம் ஒழுங்கை நாங்க அப்படியே தூக்கி நிமிர்த்துவோம்னு வந்தீங்களா? "ஆறு மாசத்துல பாருங்க"ன்னு ஒருத்தர் வளர்ந்து கெட்டவர் ஒருத்தர் பேசினாரே, ஆதவ் அர்ஜுனா லாட்டரி டிக்கெட் மெத்தமட்டைன்... அவருக்கும் சம்பந்தம் இருக்கு. அதனால எதுக்கு வாய மூடிக்கிட்டார்னா, அந்த போர்ட், இவருக்கு கீழ தான் அந்த துறைமுகம் எல்லாம் வருது. அப்ப என்ன மாற்றத்துக்காக நீங்கள் வந்தீங்க? அப்போ திமுக-வ பழி போட்டு ஆட்சிக்கு வந்தீங்க.
நான் ரொம்ப ரொம்ப கை எடுத்து கும்மிட்டு கேட்கிறேன், தமிழ்நாட்டுடைய மக்களை... இந்த விஜய் ரசிகர்களை விட்டுருங்க, அவங்க படம் எப்படி கண்றாவியா வந்தாலும் "என் தலைவன் மாஸ்"னு போவாங்க. ஆனா, ஒரு மாற்றத்துக்காக நீங்களெல்லாம் பொதுமக்கள் ஓட்டு போட்டீங்களா, உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க பாருங்க, இது மாற்றமா? தமிழ்நாட்டுக்கு இது மாற்றமா? எவ்வளவு பெரிய கேவலத்தை உண்டாக்கி இருக்காங்க? யாராவது நிம்மதியா பண்டிகை காலத்துல சொந்தக்காரங்க வீட்டுக்கு ரோட்டுல போக முடியுதா.? வெளியில் யாராவது ஒருத்தர் தப்பு செஞ்சானா தட்டி கேட்கிற மனப்பக்குவம் இன்னைக்கு இருக்கா தமிழ்நாட்டுல? இன்னைக்கு கார்லயோ பைக்லயோ ஒருத்தன் நம்ம போயிட்டு இருக்கோம் குடும்பத்தோட போறோம்னா, ஒருத்தன் இடிச்சிட்டான்னா கூட அவனை கேக்குறதுக்கு பயமா இருக்குது குடும்பத்தோட போனோம்னா. கேட்டா அவன் திருப்பி அடிப்பான் நம்மள, அவன் ஒரு பெரிய கஞ்சா அடிப்பவனா இருப்பான். அவன் ரோட்ல ஒருத்தன் யாராவது சண்டை போட்டுட்டு இருந்தாங்களா, அதை தட்டி கேட்கிற மனநிலை இன்னைக்கு தமிழ்நாட்டில இருக்கா? அந்த அளவுக்கு ஒரு பாதுகாப்பு சூழ்நிலை தமிழ்நாட்டில இருக்கா?
தமிழ்நாட்டு மக்களை கையெடுத்து கும்மிட்டு கேட்கிறேன், மாற்றத்துக்காக நீங்க ஓட்டு போட்டீங்களே, என்ன பெரிய மாற்றத்தை செஞ்சாரு விஜய்?
ஸ்டாண்ட்அப் காமெடியன் ராஜ்மோகன் மினிஸ்டர் என்ன சொல்றாரு? "அந்நியன், அம்பி மாதிரி...மாற்றி பேசுகிறார் என்று"
சார், உங்க தலைவர் விஜய்தான் சார் 'ரெமோ' மாதிரி சுத்திகிட்டு இருக்காறாரு! ஸ்டாண்ட்அப் காமெடியன் மினிஸ்டர்ஸ், நீங்கள் நிறைய நிறைய மாட்டிப்பீங்க. நீங்கள் ஒரு சாதாரண சாமானிய ஓட்டுபோட்ட பொதுமக்களை அம்பின்னிங்கன்னா, உங்க தலைவர் விஜய் வந்து ரெமோ மாதிரி சுத்துகிறார்! நீங்கள் ஆட்சிக்கு வரதுக்கு முன்னாடி எப்படி இருந்தீங்க? ஆட்சிக்கு வரதுக்கு முன்னாடி நீங்கள் அம்பி மாதிரி இருந்தீங்க, இப்போ ஆட்சிக்கு வந்த பிறகு நீங்கள் அந்நியன் மாதிரி பேசுறீங்க, உங்க தலைவர் விஜய் ரெமோ!
அந்த காவல்துறை இன்ஸ்பெக்டர் கிருபாநிதியை டிஜிபி இம்மீடியட்டா அவரை சஸ்பென்ட் பண்ணனும், அவரையும் அரெஸ்ட் பண்ணனும். ஏன்னா, துணை சபாநாயகருக்கு அவர் துணையா போயிருக்கிறார். சென்னையில, தமிழ்நாடு பூரா இன்னைக்கு போலீஸ்களுக்கு எல்லாம் கட்டப்பஞ்சாயத்து ஆரம்பிச்சிட்டாங்க சார்! எல்லாம் கட்டப்பஞ்சாயத்து பண்றாங்க. ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் சொல்ற வேலையை மட்டும்தான் செய்றாங்க. ஒரு லேண்ட் இஸ்யூஸ்ல கூட ஒருத்தன் போய் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டா, உடனே ஆளுங்கட்சி எம்எல்ஏ சப்போர்ட் பண்றாரு, உடனடியா போலீஸ் கூப்பிட்டு உட்கார்ந்து எழுதி வாங்குறாங்க. என்கிட்ட அந்த எவிடன்ஸ் (Evidence)லாம் இருக்கு. இன்னைக்கு காவல்துறை வந்து ஆளுங்கட்சிக்கு வந்து ஒரு ஏவல் துறை மாதிரி செயல்படக்கூடாது, தப்பு இது! உங்களுடைய இன்டிவிஜுவாலிட்டி, இன்டிபென்டன்ஸ் (Individuality, Independence) நீங்கள் லூஸ் பண்றீங்க. ஒரு இன்ஸ்பெக்டர் வந்து போய் மிரட்டி கொண்டு வந்து பக்கத்துல உட்கார வச்சு, அவரே வீடியோ எடுக்கிறார்னு அவங்களே வாக்குமூலம் கொடுக்கிறாங்க; இன்ன வரைக்கும் இன்ஸ்பெக்டரை கைது பண்ணலையே நீங்கள்?
ஒரு சபையில உட்கார்ந்து சபையை வழிநடத்துவதற்கு தகுதியற்ற ஒரு நபர் ஆயிட்டார். இதே திமுக எம்எல்ஏவா இருந்தா, எதிர்க்கட்சி எம்எல்ஏக்களா இருந்தா உடனே ராஜினாமா பண்ண சொல்லுவீங்க, உடனே கைது பண்ண சொல்லுவீங்களே! இந்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏவையும், துறையூர் எம்எல்ஏவையும், அந்த மணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் கிருபாநிதியையும் உடனடியா கைது செய்யணும்.
இவ்வாறு அவர் கூறினார்.