தூத்துக்குடியில் 17 தாசில்தார்கள் பணியிட மாற்றம்: கலெக்டர் உத்தரவு


தூத்துக்குடியில் 17 தாசில்தார்கள் பணியிட மாற்றம்: கலெக்டர் உத்தரவு
x

பணிமாறுதல் குறித்து எவ்வித கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் நிர்வாக நலன் கருதி தாசில்தார் நிலையில் 17 பேரை மாறுதல்களும், நியமனங்களும் செய்து மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி, வாஞ்சி மணியாச்சி- நாகர்கோவில் இரட்டை அகல ரயில்பாதை திட்டம் தனி தாசில்தார் (நி.எ) கலா கயத்தார் தனி தாசில்தாராகவும் (ச.பா.தி), கோவில்பட்டி முன்னாள் தாசில்தார் வசந்த மல்லிகா தூத்துக்குடி அரசு கேபிள் டிவி தனி தாசில்தாராகவும், தூத்துக்குடி அரசு கேபிள் டிவி தனி தாசில்தார் ராஜலட்சுமி சில்லாநத்தம் சிப்காட் தனி தாசில்தாராகவும் (நி.எ), தூத்துக்குடி நெடுஞ்சாலைப்பணிகள் தனி தாசில்தார் (நி.எ) பொன்னுலட்சுமி சாத்தான்குளம் தாசில்தாராகவும், கயத்தார் தனி தாசில்தார் (ச.பா.தி) அறிவழகன்(எ) சிவராஜ் ஓட்டப்பிடாரம் தாசில்தாராகவும், தூத்துக்குடி தனி தாசில்தார் (ச.பா.தி) அந்தோனி ஜெபராஜ் திருச்செந்தூர் தாசில்தாராகவும், எட்டயபுரம், வெம்பூர் சிப்காட் தனி தாசில்தார் (நி.எ) பாலசுப்பிரமணியம் கோவில்பட்டி தாசில்தாராகவும், ஏரல் தனி தாசில்தார் (ச.பா.தி) கண்ணன் விளாத்திகுளம் தாசில்தாராகவும், சாத்தான்குளம் தாசில்தார் இசக்கிமுருகேஸ்வரி தூத்துக்குடி தனி தாசில்தாராகவும் (ச.பா.தி), திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம் ஏரல் தனி தாசில்தாராகவும் (ச.பா.தி), கோவில்பட்டி தாசில்தார் சரவணப்பெருமாள் எட்டையபுரம் தாசில்தார் அலுவலகம் தனி தாசில்தாராகவும் (ச.பா.தி), விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன் எட்டயபுரம், வெம்பூர் சிப்காட் தனி தாசில்தாராகவும் (நி.எ), ஓட்டப்பிடாரம் தாசில்தார் ஆனந்த் தூத்துக்குடி நெடுஞ்சாலைப்பணிகள் தனி தாசில்தாராகவும் (நி.எ), சில்லாநத்தம் சிப்காட் தனி தாசில்தார் (நி.எ) சுப்புலட்சுமி ஓட்டப்பிடாரம், தெற்கு வீரபாண்டியபுரம் சிப்காட் தனி தாசில்தாராகவும் (நி.எ), தூத்துக்குடி, அல்லிகுளம் சிப்காட் தனி தாசில்தார் (நி.எ) வாமணன் ஓட்டப்பிடாரம், தெற்கு வீரபாண்டியபுரம் சிப்காட் தனி தாசில்தாராகவும் (நி.எ), ஓட்டப்பிடாரம், தெற்கு வீரபாண்டியபுரம் சிப்காட் தனி தாசில்தார் (நி.எ) ராணி தூத்துக்குடி, தேசிய நெடுஞ்சாலைகள் தனி தாசில்தாராகவும் (நி.எ), தூத்துக்குடி, தேசிய நெடுஞ்சாலைகள் தனி தாசில்தார் (நி.எ) செல்வலட்சுமி ஓட்டப்பிடாரம், தெற்கு வீரபாண்டியபுரம் சிப்காட் தனி தாசில்தாராகவும் (நி.எ) பணியிட மாறுதல் செய்யப்படுகின்றனர்.

இம்மாறுதல்கள் குறித்து எவ்வித மேல்முறையீடும் ஏற்றுக்கொள்ளப்படாது. தனியர்கள் உடனடியாக புதிய பணியிடத்தில் பணியேற்க வேண்டும். பணிமாறுதல் குறித்து எவ்வித கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது. பணியேற்பிடைக்காலத்திற்குள் பணியேற்காது மேற்படி நாட்கள் அ.வி.108 r/w Govt. Lr.No.53280/Revenue (Ser.1) Dept./2004-1 dated 5.5.2006-ன்படி ஊதியமில்லா விடுப்பாக வரன்முறைபடுத்தப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. தனியர்கள் மேற்படி பணியிடத்தில் பணியில் சேர்ந்த விவரத்திற்கு அறிக்கை சமர்பிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story