கோவையில் குடோனில் பதுக்கிய 1,720 சிலிண்டர்கள் பறிமுதல்

இதுதொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கோவையில் குடோனில் பதுக்கிய 1,720 சிலிண்டர்கள் பறிமுதல்
Published on

கோவை,

அமெரிக்க-ஈரான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் காரணமாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. குறிப்பாக வர்த்தக சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. எனவே சிலிண்டர்கள் பதுக்குவதை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கலெக்டர் பவன்குமார் உத்தரவின்பேரி லும், ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா அறிவுறுத்தலின்படியும் மதுரை மண்டல சூப்பிரண்டு ஸ்ரீநிவாச பெருமாள் கண்காணிப்பில், கோவை போலீஸ் துணை சூப்பிரண்டு மரியமுத்து தலைமையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள்.

கடந்த ஒரு மாதத்தில் கோவை மற்றும் பொள்ளாச்சியில் நடத்தப்பட்ட சோதனையில் குடோன்களில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து இருந்த 1,720 வர்த்தக சிலிண்டர்கள் மற்றும் 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக மொத்தம் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 30 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. சிலிண்டர் பதுக்கல் தொடர்பாக தகவல் கிடைத்தால் தெரிவிக்கலாம் என்றும், சட்டவிரோதமாக சிலிண்டர்களை பதுக்கி வைக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்து உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com