மின் சேவை கட்டணங்களுக்கு 18% ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

மின் சேவை கட்டணங்களுக்கான 18% ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மின் சேவை கட்டணங்களுக்கு 18% ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
Published on

சென்னை,

மின் சேவைகளுக்கான 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி வசூலிப்பை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், மின்பதிவு கட்டணம், மின் இணைப்பு கட்டணம், வளர்ச்சி கட்டணம், ஆரம்ப மின் பயன்பாடு கட்டணம், மின் துண்டிப்பு கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும், ஆனால் இதுவரை எந்த கட்டணத்திற்கும் சேவை வரி வசூலிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளதாகவும் சாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com