10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018ல் தான் 18 காவல்நிலைய மரணங்கள் நடந்துள்ளன - டிஜிபி சைலேந்திர பாபு

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018ல் தான் 18 காவல் நிலைய மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மதுரை,

தமிழக காவல் நிலையங்களில் கைதி மரணங்களை தடுப்பது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாவட்டம் தோறும் விழிப்புணர்வை கருத்தரங்குகளை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மதுரை தெப்பக்குளம் தனியார் கல்லூரியில் காவல் நிலைய மரணம் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசுகையில், "அகில இந்திய அளவில் சுமார் 950 மரணங்கள், காவல் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 84 மரணங்கள் அரங்கேறி உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் 18 காவல் நிலைய மரணங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன.

இது தொடர்பாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 12 வழக்குகளில் மட்டுமே போலீசாரின் தவறு காரணமாக மரணம் நிகழ்ந்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தமிழகத்தில் இனி ஒருவர் கூட காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும்போது உயிர் இழக்கக்கூடாது என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்" என்று அவர் கூறினார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com