நாடு முழுவதும் 18,262 கோடை கால சிறப்பு ரெயில்கள் இயக்கம்

ஜூலை 15-ந்தேதி வரை கோடைகால சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடைகால விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுபோன்ற விடுமுறை காலங்களில் சொந்த ஊர்களுக்கும், குளிர் பிரதேசங்கள், புனித தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு குடும்பம், குடும்பமாக மக்கள் பயணிப்பார்கள்.

எனவே ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை 18 ஆயிரத்து 262 கோடைகால சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதில் இதுவரை 11 ஆயிரத்து 878 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பயணிகளின் நலனுக்காக மேலும் எஞ்சிய ரெயில்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com