

புவனேஸ்வர்,
ஒடிசா மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,672 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மேலும் 9 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 305 ஆக உயர்ந்துள்ளது. இன்று கண்டறியப்பட்டுள்ள 1,876 கொரோனா பாதிப்பில் 1,182 பேர் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் கண்டறியப்பட்டுள்ளனர். 694 பேர் தினசரி பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஒடிசாவில் தற்போது 15,508 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 34,806 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.