18-ம் நூற்றாண்டு வணிகக்குழு கல்வெட்டு கண்டெடுப்பு

18-ம் நூற்றாண்டு வணிகக்குழு கல்வெட்டு கண்டெடுப்பு
Published on

தேவர்முக்குளம் கிராமத்தில் முதலாம் ராஜேந்திரசோழனின் 18-ம் நூற்றாண்டு வணிகக் குழு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், தேவர்முக்குளம் கிராமத்தில், வணிகக்குழு கல்வெட்டினை புதிதாய் கண்டுபிடித்துள்ளது.

இங்குள்ள பள்ளிகொண்ட பெருமாள் கோவில் கூரையில் வைத்துக் கட்டப்பட்டிருந்த முதலாம் ராஜேந்திரசோழனின் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த வணிகக் குழு கல்வெட்டு, கோவிலை பிரித்துக் கட்டியபோது கீழே தனியே வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

வீரப்பட்டணம்

இந்த கல்வெட்டு தேவர் முக்குளம் சிறந்த வணிக தளமாக இருந்துள்ளது. அங்கு பல்வேறு வணிக குழுக்கள் இருந்து, அவர்கள் தங்கள் பாதுகாப்புக்கு என வீரர்படைகளை வைத்துள்ளனர். மேலும் அந்த வீரர்கள் தங்குவதற்கு என வீரப்பட்டணம இங்கு இருந்ததை இந்த கல்வெட்டு வாயிலாக அறிய முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வுப்பணியில் பிரகாஷ், தலைவர் நாராயணமூர்த்தி, சதானந்த கிருஷ்ணகுமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், வரலாற்று ஆசிரியர் ரவி, தேவர்முக்குளம் சிங்காரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com