சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 19 கிலோ கஞ்சா பறிமுதல்

யாரும் உரிமை கோராத 40 கிலோ எடை கொண்ட புகையிலை பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 19 கிலோ கஞ்சா பறிமுதல்
Published on

சென்னை,

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ரெயில்களில் மதுபானங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், நேற்று முன்தினம் எழும்பூர் ரெயில் நிலையத்தில் பல்வேறு ரெயில்களில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, புவனேஷ்வர்-ராமேசுவரம் ரெயிலில் பயணிகளின் இருக்கைக்கு கீழ் யாரும் உரிமை கோராத பெட்டியில் 12 கிலோ எடை கொண்ட கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். மேலும், ஹவுரா-திருச்சி ரெயிலில் கேட்பாரற்று கிடந்த ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.9.50 லட்சம் மதிப்புள்ள 19 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, ஜோத்பூரில் இருந்து எழும்பூர் வழியாக மங்களூர் செல்லும் ரெயிலில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணியிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர் வைத்திருந்த பையில் 2 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியை சேர்ந்த நந்த்கிஷோர் (வயது 37) என்பது தெரியவந்தது.

அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, பறிமுதல் செய்த புகையிலை பெருட்களையும், அவரையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர். மேலும், அதே ரெயிலின் மற்றொரு பெட்டியில் யாரும் உரிமை கோராத 40 கிலோ எடை கொண்ட புகையிலை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com