கரூர் சம்பவத்தின்போது பணியாற்றியவர்கள் உள்பட 19 காவல்துறையினர் பணியிட மாற்றம்

துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட 19 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் சம்பவத்தின்போது பணியாற்றியவர்கள் உள்பட 19 காவல்துறையினர் பணியிட மாற்றம்
Published on

கரூர்,

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்த நகர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உட்பட 19 பேரை தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு பணியிட மாற்றம் செய்து காவல்துறை தலைமை இயக்குநரகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின்படி, கரூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட 19 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது அங்கு பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com