தமிழ்நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 1.91 லட்சம் படுக்கைகள் தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஒமைக்ரான் தொற்றில் இருந்து முழுமையாக பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 1.91 லட்சம் படுக்கைகள் தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

சென்னை,

சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் 950 படுக்கைகள் கொண்ட வார்டினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் தா.மோ. அன்பரசன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

அதன் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நந்தம்பாக்கம் கொரோனா சிகிச்சை மையத்தில் மொத்தம் 900 படுக்கைகள் உள்ளன. தற்போது 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த படுக்கைகளில், அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு 350 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 8,912 பேர் மருத்துவமனையி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 1,91,902 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் வரும் 22ம் தேதி (சனிக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.

ஒமைக்ரான் தொற்றில் இருந்து முழுமையாக பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. ஆதலால் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com