ஜெராக்ஸ் கடைக்காரரிடம் ரூ.1.92 லட்சம் அபேஸ்

ஜராக்ஸ் கடைக்காரரிடம் ரூ.1.92 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஜெராக்ஸ் கடைக்காரரிடம் ரூ.1.92 லட்சம் அபேஸ்
Published on

ஜராக்ஸ் கடைக்காரரிடம் ரூ.1.92 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.சேலம் கோரிமேட்டை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 44). இவர் அந்த பகுதியில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய நபர், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 625 எடுக்கப்பட்டதாக அவரது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இது குறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அபேஸ் செய்யப்பட்ட பணம் 2 வங்கியில் இருந்து ரூ.59 ஆயிரம் திரும்ப புருஷோத்தமன் வங்கி கணக்கில் சேர்த்தனர். மீதி பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com