விழுப்புரம் மாவட்டத்தில் 194 போலீசார்கள் இடமாற்றம்


விழுப்புரம் மாவட்டத்தில் 194 போலீசார்கள் இடமாற்றம்
x

194 போலீசாரும் மாவட்டத்திற்குள் வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனி காணை போலீஸ் நிலையத்திற்கும், வளவனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள் கண்டமங்கலத்திற்கும், அனந்தபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மேல்மலையனூருக்கும், விழுப்புரம் நகர போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் விழுப்புரம் போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கும், மயிலம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் கெடாருக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

இதேபோல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களான கிளியனூர் பாலமுருகன் வானூருக்கும், கோட்டக்குப்பம் ஏழுமலை ஆரோவில் போலீஸ் நிலையத்திற்கும், ஒலக்கூர் கலைமணி ரோஷணைக்கும், விழுப்புரம் மேற்கு நாகராஜ் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கும், கண்டமங்கலம் சண்முகசுந்தரம் அரகண்டநல்லூருக்கும், விழுப்புரம் மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்புப்பிரிவு மரியபிரான்சிஸ் விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கும், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய லதா விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கும் இவர்கள் உள்பட 35 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 62 போலீஸ் ஏட்டுகள், 97 போலீஸ்காரர்கள் என மொத்தம் 194 போலீசார், மாவட்டத்திற்குள் வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பிறப்பித்துள்ளார். மேற்கண்ட 194 போலீசாரும் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்ததால் அவர்கள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 More update

Next Story