விழுப்புரத்தில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

விழுப்புரத்தில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனா.
விழுப்புரத்தில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
Published on

விழுப்புரம் வழுதரெட்டி ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் மகன் பரணிதரன் (வயது 31). இவரும் அதே பகுதியை சேர்ந்த பிரதீப்ராஜ் (25), பிரதாப் (23) ஆகியோர் நண்பர்கள் ஆவர். இவர்கள் வழுதரெட்டி சிவன் கோவிலில் மேளம் அடிப்பவர்கள். மேளம் அடித்த கூலித்தொகை ரூ.1,500-ஐ பிரதீப்ராஜிம், பிரதாப்பும் பரணிதரனுக்கு தர வேண்டியுள்ளது. இந்த கூலித்தொகையை தரும்படி அவர்களிடம் சென்று பரணிதரன் கேட்டுள்ளார். அதற்கு பிரதீப்ராஜிம், பிரதாப்பும் சேர்ந்து பரணிதரனை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்ராஜ், பிரதாப் ஆகியோரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com