வங்கியில் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்ய முயற்சி: 2 பேர் கைது

சென்னையில் உள்ள ஒரு வங்கி கிளையில் தங்க நகையை அடமானம் வைத்து பணம் பெற வந்த நபரிடம் ஆதார், பான் கார்டு கேட்டபோது வங்கி கணக்கு புத்தகம் மட்டுமே இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
வங்கியில் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்ய முயற்சி: 2 பேர் கைது
Published on

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் ஏ.கே.சாமிநகர் 1-வது தெருவில் செயல்படும் ஒரு வங்கி கிளையில் 18 கிராம் தங்க நகையை அடமானம் வைத்து பணம் பெற ராஜேஷ் சோனி என்பவர் வந்தார். அவரிடம் ஆதார், பான் கார்டு கேட்டபோது வங்கி கணக்கு புத்தகம் மட்டுமே இருப்பதாக கூறினார்.

இதனால் சந்தேகமடைந்த நகை மதிப்பீட்டாளர் குமரன், அந்த நகையை பரிசோதித்ததில் அது தரம் குறைந்த போலி நகை என தெரியவந்தது. மேலும் இதுபோன்ற நகைகளை அந்த வங்கியின் மற்ற கிளைகளிலும் அடமானம் வைத்திருப்பதாக ராஜேஷ்சோனி கூறியதால் இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டது.

அதில் அந்த நகைகள் அனைத்தும் போலி என்பது தெரியவந்தது. இதுகுறித்து தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்சோனி மற்றும் அவரது நண்பர் தமிழ்ச்செல்வன்(48) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com