நெல்லையில் மது அருந்த பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது


நெல்லையில் மது அருந்த பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
x

நெல்லை சி.என்.கிராமம் பகுதியில் மது அருந்த பணம் தர மறுத்த ஒரு பெண்ணை, வாலிபர் ஒருவர் அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி, தாக்கி ரூ.500 மதிப்புள்ள காய்கறிகளை சாலையில் வீசியுள்ளார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சி.என்.கிராமம் பகுதியில் கடை நடத்தி வருபவர் சுப்புலட்சுமி (வயது 40). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் இசக்கி ராஜா(33) என்பவர் மது அருந்த பணம் கேட்டுள்ளார். சுப்புலட்சுமி பணம் தர மறுத்த காரணத்தினால் அவரை அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி, தாக்கி சுமார் ரூ.500 மதிப்புள்ள காய்கறிகளை சாலையில் வீசியுள்ளார். இதுகுறித்த அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து இசக்கிராஜாவை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இதேபோல் திருநெல்வேலி மாநகரம் பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரொட்டிக்கடை பஜார் பகுதியில் பேட்டை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த சம்சுதீன் மகன் இஸ்மாயில்(42) என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே அவரை சரித்திர பதிவேடு குற்றவாளியான தாழையூத்து பகுதியை சேர்ந்த குமரய்யா மகன் முருகன்(எ) வேல்முருகன்(34) வழிமறித்து மது அருந்த பணம் கேட்டுள்ளார். இஸ்மாயில் பணம் தர மறுத்த காரணத்தினால் அவரை முருகன் அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி, கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் முருகன்(எ) வேல்முருகனை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

1 More update

Next Story