நெல்லையில் பெண் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு: 2 பேர் கைது

நெல்லை மாநகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் யூடியூப்பில் ஆபாசமாக கருத்து தெரிவித்தது சம்பந்தமாக, அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் யூடியூப் (Youtube) காணொளிக்கு ஆபாசமாக கருத்து தெரிவித்தது சம்பந்தமாக, அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய திருநெல்வேலி, பழையபேட்டையைச் சேர்ந்த பொன்னுதுரை மற்றும் ஒருவர் என 2 பேர் நேற்று திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
பொதுமக்கள் இதுபோன்ற இணைய குற்றங்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக சைபர் குற்ற இலவச எண் 1930-ஐ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






